பாதாள சாக்கடை அடைப்பால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது

பாதாள சாக்கடை அடைப்பால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2022-08-31 22:10 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் சாலைகளில் காட்டாறுபோன்று ஓடுவதும், பள்ளங்களில் தண்ணீர் குளம்போல தேங்குவதும், சாக்கடை கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதும் வாடிக்கையாகி விட்டது.

அதே நேரம் ஈரோடு மாநகராட்சி 13 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பாய்ந்து ஓடுவதற்கு முன்னதாகவே பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (மாநகராட்சி 11-வது வார்டு) பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்கி உள்ளது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துஇருப்பதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று அந்த பகுதிக்கு சென்றுபார்வையிட்டார். மேலும், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்