தடுப்புகளை அகற்ற வேண்டும்

தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 15:18 GMT


அரக்கோணம் ரெயில் நிலையம் முன்பு சற்று தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்துவதால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கையில் பைகள் மற்றும் குழந்தைகளை அழைத்து வரும் பெண்கள் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு செல்ல கஷ்டப்படுகின்றனர். மேலும் அந்த வழியிலேயே பொதுமக்கள் செல்ல முடியாத படி ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தடுப்புகளை அகற்றி, ஆட்டோ நிறுத்தத்துக்கான இடம் ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்