தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக முற்றுகை

திருவட்டார் பஸ் நிலையத்தில் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக முற்றுகை

Update: 2023-05-02 21:09 GMT

திருவட்டார், 

திருவட்டாரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி ரூ.2.55 கோடி செலவில் நடந்து வருகிறது. தற்போது தூண்கள் அமைக்கும் வேலைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் தூண்கள் அமைக்க போடப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தாமல் கான்கிரீட் வேலை நடப்பதாக சிலர் அங்கு ெசன்று முற்றுகையிட்டு ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள் அங்கு சென்றனர். தொடர்ந்து திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரர் தரப்பில், 'குழாய் மூலமாக தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு தான் வேலைகள் நடத்துகிறோம். என்ஜினீயரின் மேற்பார்வையில்தான் வேலைகள் நடக்கிறது' என்று கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் வேலையை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுரை கூறினர். இதையடுத்த அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்