குளம் தூர்வாராததை கண்டித்து சாலை மறியல்

குளம் தூர்வாராததை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2023-08-08 19:00 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கொடியாளத்தூர் ஊராட்சி வடபாதி கிராமத்தில் உள்ள வண்ணான் குளத்தை தூர்வாராததை கண்டித்து நேற்று கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் வடபாதி பஸ் நிறுத்தம் பகுதியில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருக்குவளை தாசில்தார் சுதர்சன், வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்துக்குள் குளத்து ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்