ஆதரவற்றோருக்கு போர்வைகள்
சங்கரன்கோவிலில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தற்போது இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் இரவில் திறந்தவெளியில் வசிக்கும் ஆதரவற்றோர் பனிப்பொழிவால் பாதிக்கப்படாதவாறு, சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போர்வைகளை வழங்கினர்.
சங்கரன்கோவில் அம்மன் சன்னதி முன்பாக திறந்தவெளியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் நூர் முகம்மது, நகர தலைவர் அப்துல் நசீர், செயலாளர் ஷேக் முகம்மது உள்ளிட்டவர்கள் போர்வைகளை வழங்கினர்.
சங்கரன்கோவில் தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளியில் வசிப்பவர்களுக்கும் போர்வை வழங்கப்பட்டது.