கருப்பட்டி உற்பத்திக்கு தயாராகும் பனைமர தொழிலாளர்கள்
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு தயாராகும் பனைமர தொழிலாளர்கள், பனை மரத்தில் ஏறி இறங்க வசதியாக சுத்தப்படுத்தும் ஆரம்ப கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு தயாராகும் பனைமர தொழிலாளர்கள், பனை மரத்தில் ஏறி இறங்க வசதியாக சுத்தப்படுத்தும் ஆரம்ப கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கருப்பட்டி உற்பத்தி
உடன்குடி வட்டார பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டிக்கு தனி மவுசு உண்டு. உடன்குடி கருப்பட்டி என்ற ஊர் பெயரோடு தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று விற்பனையாகும். இந்த கருப்பட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் உற்பத்தி நடைபெறும்.
மேலும் பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்பட்டி இப்படி எல்லாம் தயாரிப்பார்கள்.
பணிகள் தீவிரம்
தற்போது பனைமரத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக அந்த மரத்தில் உள்ள தும்புகள், காய்ந்த ஓலைகள், தேவையற்ற பனைமர மட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, பதனீர் தரும் பாளை எந்த இடையூறும் இல்லாமல் வருவதற்காக இந்த ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார்கள்.
தற்போது அந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வருகின்ற மார்ச் மாதம் புதிய கருப்பட்டி உற்பத்தியாகி சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடும் என்று கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.