கருங்கல் கடத்தல்; லாரி பறிமுதல்
கருங்கல் கடத்தியது தொடர்பாக லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சின்னசேலம்,
விழுப்புரம் கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் சின்னசேலம் அருகே கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அவர்கள் வழிமறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும், டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் கருங்கல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த உதவி புவியியல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அதனை சின்னசேலம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.