பா.ஜ.க.வினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் தி.மு.க. அரசுக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தில்டுபட்டனர்.

Update: 2023-09-06 13:17 GMT

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் தி.மு.க. அரசுக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தில்டுபட்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை நிதியை முறையாக தமிழக அரசு முறையாக பயன்படுத்தாததாக கூறி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்கள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் தமிழக அரசை கண்டித்தும், தி.மு.க.விற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்