பா.ஜனதா செயற்குழு கூட்டம்

சாயர்புரத்தில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-30 19:00 GMT

சாயர்புரம்:

ஏரல் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் சாயர்புரத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் வீரமணி, கல்வியாளர் பிரிவின் மாவட்ட துணை தலைவர் சுதா ஆகியோர் பேசினார்கள்.

இதில் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்ம குருமூர்த்தி, விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ் இளந்தழகன், அமைப்புசாரா மக்கள் நலப்பிரிவு மாவட்ட துணை தலைவர் முத்துமாலை, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏரல் தாலுகா பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். காந்தி சிலை அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகமங்கலம் வரை வரும் 5பி பஸ்சை ஏரல் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் சங்கர நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்