தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி துணை தலைவி கலாராணி தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் பொன்பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் நாகேந்திரன், மணிமாறன், யூனியன் கவுன்சிலர் முருகன், நகராட்சி கவுன்சிலர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், நிர்வாகிகள் வீரபாகு, ஜோதிமுருகன், ஊடக பிரிவு எஸ்.பி.குமரன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.