பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி? - நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2024-03-14 13:14 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் முனைப்பு காட்டி வருகின்றன. தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது.

இந்த சூழலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கைகோர்த்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எட்டு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாளை அவசரமாக கூட்டுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்