தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-04-13 06:27 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பாஜகவின் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்ததையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்