பா.ஜ.க. பெண் பிரமுகர் சென்னை கொண்டு செல்லப்பட்டார்
சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிய பா.ஜ.க. பெண் பிரமுகர் சென்னை கொண்டு செல்லப்பட்டார்
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56).
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப் பட்டார். கோர்ட்டு அனுமதியின் பேரில் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரணை செய்யப்பட்டது.
இந்தநிலையில் உமா கார்கி மீது சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக சென்னை வேப்பேரி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப் பட்டதற்கான உத்தரவை கோவை சிறை அதிகாரிகளிடம் கொடுத் தனர். மேல் விசாரணை நடத்துவதற்காக உமா கார்கி சென்னை கொண்டு செல்லப்பட்டார்.