கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தரப்பில் இருந்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி குறித்து இதுவரை பா.ஜ.க. தரப்பில் இருந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"கூட்டணி குறித்து இதுவரை பா.ஜ.க. தரப்பில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. நாங்களும் தற்போதுவரை அதுபற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. உரிய நேரத்தில் அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும்போது, கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்." இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.