புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம்
புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை பாரதீய ஜனதா கட்சி மேற்கு மாவட்டம் விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. தேங்காய் விலை விழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் . மாநில அரசு பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேங்காய், இளநீரை கையில் வைத்துக்கொண்டு கலந்து கொண்டனர்.