மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 418 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 418 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிப்பது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பா.ஜனதா கட்சியினர் வார்டு, பகுதி வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி மாவட்டம் முழுவதும் 418 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து மணிநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரும், பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து தலைவருமான சித்ராங்கதன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், ஒன்றிய தொழில் பிரிவு தலைவர் சரவணன், பா.ஜ.க. பிரமுகர்கள் லிங்கேஸ்வரன், வேலாயுத பெருமாள், பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து கவுன்சிலர் தனபால் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தக்காளி விலை உயர்வை கண்டித்து அனைவருக்கும் தக்காளி விதை வழங்கப்பட்டு தக்காளி வளர்க்க நாங்கள் ரெடி என்றும், தண்ணீர் தர நீங்கள் ரெடியா என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
இதேபோன்று தூத்துக்குடி 30-வது வார்டு பா.ஜனதா கட்சி சார்பில் டூவிபுரம் மெயின் ரோட்டில் மாவட்ட பா.ஜனதா பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் தூத்துக்குடி சிவன்கோவில் தேரடி அருகே கிளைத்தலைவர் உஷாதேவி தலைமையிலும், பழைய பஸ்நிலையம் அருகே மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் சுரேஷ்குமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
தட்டார்மடம்- எட்டயபுரம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்டார்மடத்தில் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடைச்சிவிளையில் ஒன்றிய துணைத் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் பூபதி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் பழைய பஸ்நிலையத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் ஜெய ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஜோசப் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேய்க்குளத்தில் கிளை தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எட்டயபுரத்தில் அருகே உள்ள இளம்புவனம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமையிலும், எட்டயபுரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் விளாத்திகுளம், புதூர் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி- உடன்குடி
கோவில்பட்டி நகரில் 36 வார்டுகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாதாங்கோவில் தெரு படித்துறையில் நகரசபை கவுன்சிலர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதேபோல் பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி அருகே பா.ஜ.க. கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றியத்தில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் அழகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கழுகுமலை-கயத்தாறு
கழுகுமலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணை தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய பொது செயலாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், வானரமுட்டி உள்ளிட்ட ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் நடைபெற்ற கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகிலாண்டபுரம் கிராமத்தில் கனகராஜ் தலைமையிலும், ஆத்திகுளம் கிராமத்தில் தரவு வேளாண்மை பிரிவு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், ராஜாபுதுக்குடி கிராமத்தில் கிளைத் தலைவர் மாரியப்பன், தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் ஒன்றிய துணைத் தலைவர் இசக்கியம்மாள் ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்- நாசரேத்
குலசேகரன்பட்டினத்தில் பஸ்நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் சிவந்திவேல், உடன்குடி மண்டல ஒன்றிய துணை தலைவர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்தில் நகர தலைவர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரியில் தங்க கண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் முருகேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.