பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஏலகிரி மலையில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜோலார்பேட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஏலகிரி மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திலகராஜ் தலைமை வகித்தார். ஓ.பி.சி. அணி மாவட்ட துணைத் தலைவர் பிரபு, எஸ்.டி. தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் கவியரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்காததை கண்டித்தும், ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தி.மு.க. அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது, ஏலகிரி மலையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். சுரேஷ், எஸ்.டி.என். மாவட்ட செயலாளர் முருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் நாகராஜ் மற்றும் கிளை தலைவர்கள், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.