மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.