கவர்னர் ஆர்.என்.ரவி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு..!

கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

Update: 2023-05-21 05:53 GMT

சென்னை,

சென்னை, கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 20 நிமிடம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது கவர்னரிடம் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்அ-மைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகை வெளியே கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்தது பற்றி விளக்கம் அளித்தனர். இதையொட்டி கவர்னர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்