பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நடந்தது.

Update: 2023-01-09 18:54 GMT

ராமநாதபுரம் கேணிக்கரை செட்டியதெரு சிவன்கோவிலில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நம்ம ஊரு பொங்கல்விழா மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் முன்னிலை வகித்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தரணி இயற்கை வேளாண் பண்ணை சார்பில் 200 பேருக்கு புதுப்பானை மற்றும் அனைத்து பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டது. ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்