காந்தி அஸ்தி கரைப்பு நினைவிடத்தில் பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே காந்தி அஸ்தி கரைப்பு நினைவிடத்தில் பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-01-30 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் தொகுதி கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலுக்கு பின்புறம் செல்லும் நிட்சேப நதி கரையில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைத்த கல்வெட்டுடன் நினைவிடம் உள்ளது. அங்கு வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் 76-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் தலைமையில் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்