பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம்

பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-06 18:45 GMT


மத்திய அரசு தமிழக அரசுக்கு பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கிய நிதியில் தி.மு.க. அரசு முறைகேடு செய்ததாகவும், பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கிய அந்த நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியதாகவும் கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. அரசுக்கு அந்த நிதி போதவில்லை என்றால் பிச்சை எடுத்து நிதி தருகிறோம் என்று கூறி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட பட்டியல் அணி தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார்.

மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், ஆத்மா கார்த்திக், கவுன்சிலர் குமார், மாநில பட்டியல் அணி செயலாளர் பிரபு, மகளிர் அணி துணை தலைவி கலா ராணி, தலைவர் பிரபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்