பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், செயலாளர் ஆர்.எம். ஹரி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேல்முருகன், சுப்பிரமணி, நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மகளிர் அணி தலைவி சிவசங்கரி சந்திரலேகா, ஒன்றிய துணை தலைவர்கள் சேகர், அறிவழகன், செயலாளர் ராமச்சந்திரன், ஊடகப் பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.