பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-23 14:34 GMT

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று பா.ஜனதா சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சிவமுருக ஆதித்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பி.எம்.பால்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் மாநில விருந்தோம்பல் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அரிக்கேன் விளக்குகளை கைகளில் ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத் திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவர் உமா ரவிராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு துறை பிரிவு மாநில தலைவர் சோழன் பழனிச்சாமி, தொழிற்பிரிவு மாநில செயலாளர் சீனிவாச ராகவன், மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி, நகர செயலாளர் சீனிவாசன், நகர பொது செயலாளர்கள் விஜயகுமார், அசோக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்