பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததை கண்டித்து நாகையில் பா. ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 17:25 GMT

வெளிப்பாளையம்:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததை கண்டித்து நாகையில் பா. ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

நாகை அவுரித்திடலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட தலைவர் கார்த்திகேயன், நகர துணை தலைவர் விஜிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சதீஸ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இணைப்பு சாலை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததை கண்டித்தும், நாகூர் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கண்டுக்கொள்ளாததை கண்டித்தும், அக்கரைப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்காததை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பானுச்சந்திரன், வைரமுத்து, பொருளாளர் ரகுநாதன் மற்றும் பல்வேறு அணி பிரிவு தலைவர்கள், மண்டல தலைவர்கள், பார்வையாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியத் தலைவர் பாலச்சந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்