திருப்பரங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது

திருப்பரங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-02-12 20:54 GMT

திருப்பரங்குன்றம், 

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணபடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதை பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமையில் கட்சியின்ர் உரிய இடத்திற்கு சென்று தடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவனியாபுரம் போலீசார் மாவட்ட தலைவர் சசிகுமார் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாவட்ட தலைவர் உள்பட கட்சியினரை விடுதலை செய்ய கோரி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் சன்னதி பஸ் நிறுத்ததில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் பாலா தலைமையில் மண்டல பொறுப்பாளர் ராமதாஸ் முன்னிலையில் நேற்று இரவில் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்படுத்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன், மண்டல பொதுச்செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்