பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
நடுவக்குறிச்சியில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சாயர்புரம்:
சாயர்புரம் நகரப்பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடுவக்குறிச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஏரல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, உமரி சத்தியசீலன், சிவமுருகன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சித்ராதங்கதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆலய வழிபாடு குழு தலைவர் சுகுமார், மகளிர் அணி செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.