பாஜக பிரமுகர் கொலை வழக்கு - எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரண்..!

20 - 25 வயது மதிக்கத்தக்க 9 பேர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்.

Update: 2023-04-28 07:57 GMT

சென்னை,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது.

பின்னர் காரில் இருந்து வெளியேறிய பிபிஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பிபிஜி சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் 9 தனிப்படை அமைத்து கொலைக்கார கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர். 20 - 25 வயது மதிக்கத்தக்க சரத், சங்க குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக சங்கரை கொலை செய்ததாக சரணடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்