திமுக பைல்ஸ் 2: வீடியோ வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை
திமுக பைல்ஸ் 2 என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,
'திமுக பைல்ஸ் 2' என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் கருவிகள் வாங்கியது, வருமான வரி ஏய்ப்பு, பினாமி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து வினியோகத்தில் 600 கோடி ரூபாய் என மொத்தம் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை கவர்னரிடம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.