போலீஸ் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

வத்தலக்குண்டுவில் போலீஸ்நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

Update: 2023-07-28 20:00 GMT

வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் நேற்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்