பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-23 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் பா.ஜ.க. மேற்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் எலியாஸ் கடை முதல் அய்யன்கொல்லி வரை குண்டும் குழியுமான பாதாள குழிகள் நிறைந்த சாலையால் அவசர தேவைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அரசுபள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும். சேரங்கோடு ஊராட்சியில் குவியும் குப்பைகளை அகற்ற வேண்டும். அனைத்து ரேஷன் அட்டையுடைய குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும். கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்