கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில், பா.ஜனதா வடக்கு மாவட்ட பிரசார பிரிவு சார்பில் தேசிய நல்லாட்சி தின பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் உத்தண்ட ராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி, மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், மாநில செயலாளர் விக்னேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், மாரியப்பன், மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.