பா.ஜ.க. பொதுக்கூட்டம்

பா.ஜ.க. பொதுக்கூட்டம்

Update: 2022-07-27 20:18 GMT

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் - மணலூர் சாலையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தஞ்சை வடக்கு மாவட்ட பார்வையாளர் பண்ணவயல். இளங்கோ, மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பூண்டி.வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் ரஜினி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்றுக்கட்சியினர் 100 பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். முடிவில் அமைப்புசாரா தொழிலாளர் நல பிரிவு மாவட்ட செயலாளர் இனியவன் காந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்