பா.ஜ.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்

திருக்கோவிலூர் நகர பா.ஜ.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்

Update: 2022-10-03 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகர பா.ஜ.க நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நகர தலைவர் எஸ்.டி. புவனேஸ்வரி தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அறிவழகன், ஒன்றிய பொது செயலாளர்கள் ராஜாஜி, பத்ரிநாராயணன், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் வெங்கட்ராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் பாலசுந்தரம் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகள் செய்த பணிகளையும் ஆய்வு செய்து பாராட்டி பேசினார். மேலும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் வகையில் நிர்வாகிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் கருணாகரன், இளைஞர் அணி தலைவர் நரேஷ், பொதுச் செயலாளர்கள் வீரபாரதி மற்றும் ஸ்ரீதர், துணை தலைவர்கள் மதன், முருகன், லலிதா, நகர செயலாளர்கள் திருமுருகன், சாகர்ரமேஷ், பிரிவு தலைவர்கள் சதீஷ், விஸ்வநாதன், கீதாசங்கர், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர விவசாய அணி தலைவர் ஞானவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்