பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மீனா இசக்கி முத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பணத்தை வாரி வழங்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளச்சாராய மரணங்களால் பாதிக்கப்பட்ட இளம் விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் கள்ளச்சாராயங்களை தடுக்கும் வாசகங்களை பதாகைகளில் எழுதி கைகளில் ஏந்திய படியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர்கள் குமார், ராஜ்குமார், துணை தலைவர்கள் வினோத்குமார், ஜோதி மணிவண்ணன், செயலாளர்கள் ரமேஷ்கண்ணா, தனலட்சுமி, பூமா, ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.