பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்தும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தீபா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, மாவட்ட துணை தலைவர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தர்மராஜா கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அதைத்தொடர்ந்து பெண்கள் உள்பட 250 பா.ஜ.க.வினரை டவுன் போலீசார் கைது செய்தனர்.