கயத்தாறு:
கோவில்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் மற்றும் பா.ஜ.க பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து கயத்தாறு ஒன்றியம் சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கயத்தாறு ஒன்றிய பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய மேற்பார்வையாளர் முத்துப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.