ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா புகார்

பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா புகார் அளித்துள்ளது

Update: 2022-11-27 22:44 GMT

பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் சமீபத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது கவர்னரை பற்றியும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றியும் அவர் அவதூறாக பேசினார் என்றும், அவர் மீது நெல்லை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்க வேண்டும் என்றும், நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் சென்று புகார் மனு கொடுக்கப்பட்டது.

அப்போது மண்டல தலைவர் குரு கண்ணன், நிர்வாகிகள் முருகன், செந்தில் முருகன், செந்தில் முத்துக்குமார், வை.கோபால், சண்முகசுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்