பா.ஜ.க. பிரமுகர் கைது

முகநூலில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-17 20:01 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை அடுத்த திருவேட்டநல்லூரைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 37). சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயலாளரான இவர் தனது முகநூலில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா எம்.பி. குறித்து அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திரிகூடபுரம் தி.மு.க. கிளை செயலாளர் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்