சேரன்மாதேவியில் பா.ஜ.க. கொண்டாட்டம்
குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேரன்மாதேவியில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
சேரன்மாதேவி:
பாரதீய ஜனதா கட்சி குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஒன்றிய தலைவர் சின்னமுருகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜவேலு பரமசிவன் முன்னிலை வகித்தனர். சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் சிறுபான்மை அணி துணைத் தலைவர் இசாக்கார் ராஜபால், ஒன்றிய பொருளாளர் சக்சஸ் சுந்தர், ஒன்றிய பார்வையாளர் பெரிய முருகன், ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், ரவி, வக்கீல் அணி தலைவர் முருகன், ஒன்றிய துணைத் தலைவர் இசக்கி பாண்டியன், ஸ்ரீவேல், சொர்ணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.