பாலக்கோடு:
பாலக்கோடு கிழக்கு, மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர்கள் சிவநாதன் (கிழக்கு), கோபி (மேற்கு) ஆகியோர் தலைமையில் அமானி மல்லாபுரம் பஸ் நிலையம் அருகிலும், புலிகரை பஸ் நிலையம் பகுதியிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைத்தலைவர் பாடி முரளி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்தும், பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வை குறைக்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், முன்னாள் மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் சண்முகம், ஒன்றிய பொது செயலாளர்கள் கிருஷ்ணன், முருகன், முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.