மின்கட்டண உயர்வை கண்டித்து தாராபுரத்தில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து தாராபுரத்தில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-23 16:30 GMT

மின்கட்டண உயர்வை கண்டித்து தாராபுரத்தில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தாராபுரம் அண்ணாசிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன், பொன்.ருத்தரகுமார், ஓ.பி.சி.அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாதந்தோறும் கணக்கெடுப்பு

அப்போது மாநில செயலாளர் மலர்க்கொடி கூறியதாவது:-

தமிழக அரசு மின்கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது. அதனை உடனே வாபஸ் பெற வேண்டும், மாதந்தோறும் கணக்கெடுக்கும் முறையை மின்சார வாரியம் கடைபிடிக்க வேண்டும், மின்சாரத்தை அதிகமாக காற்றாலையின் மூலம் தயாரிக்க வேண்டும். சோலார் சூரிய மின்சக்தி மூலம் மின்சார சேமிப்பிற்கு அரசு இலவசமாக அனுமதி வழங்க வேண்டும்.

இதற்கு பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதாக கூறியதை ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை வழங்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்துகொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுப்பு என்ற சுப்பிரமணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் குருபிரசாத், வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் டாக்டர் கார்த்திகா, மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் உடுமலை மகேஸ்வரி, மண்டல தலைவர்கள் செந்தில்தாஸ், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பா.ஜ.க.நகர தலைவர் செந்தில்தாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்