அழகர்மலையில் உலா வரும் காட்டெருமைகள்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் மலை பகுதியில், முயல், கீரிபிள்ளை, ேகளை ஆடு, குரங்குகள், வவ்வால், மைனா, குருவிகள் மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன.இதில் மாலை நேரங்களில் மலையில் இருந்து இறங்கி தண்ணீர் பருகுவதற்கு காட்டெருமைகள் கூட்டமாகவோ, தனியாகவோ வந்து நூபுர கங்கை தண்ணீர் சிற்றோடை வாய்க்காலில் வந்து தண்ணீர் பருகி செல்கிறது.

Update: 2023-02-12 20:40 GMT

அழகர்கோவில்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் மலை பகுதியில், முயல், கீரிபிள்ளை, ேகளை ஆடு, குரங்குகள், வவ்வால், மைனா, குருவிகள் மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன.இதில் மாலை நேரங்களில் மலையில் இருந்து இறங்கி தண்ணீர் பருகுவதற்கு காட்டெருமைகள் கூட்டமாகவோ, தனியாகவோ வந்து நூபுர கங்கை தண்ணீர் சிற்றோடை வாய்க்காலில் வந்து தண்ணீர் பருகி செல்கிறது. இதில் நூபுர கங்கை அடிவாரம், சோலைமலை முருகன் கோவில், மலையின் மையப்பகுதி பாலம், மற்றும் அழகர் மலை அடிவாரம் பகுதிகளில் இந்த காட்டெருமைகள் நடமாட்டம் மாலை நேரத்தில் அதிகமாக காணப்படுகிறது, இதை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து செல்கிறார்கள். காட்டெருமை நடமாட்டம் இருப்பதால் அதன் அருகில் யாரும் செல்லக் கூடாது என கோவில் ஊழியர்களும், வனத்துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்