சாலையில் உலா வரும் காட்டெருமைகள்

சாலையில் உலா வரும் காட்டெருமைகள்

Update: 2022-07-28 14:27 GMT

கோத்தகிரி

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை காட்டெருமைகள் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது. காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராத வண்ணம் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்