தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா

தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா வந்தன.

Update: 2022-12-04 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தொடர் மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இதை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி வியூ ஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். இவ்வாறு உலா வரும் காட்டெருமைகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு, காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்