தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் முகாம்

கோத்தகிரியில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளது.

Update: 2022-09-19 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி நகர் பகுதியில் காட்டெருமை, கரடி, முள்ளம்பன்றி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகள், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் உலா வந்த வண்ணம் உள்ளன. தொடர் மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இதனை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. கோத்தகிரி வியூ ஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்