தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு
வால்பாறையில்தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது.
வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் குடிதண்ணீர் தொட்டி உள்ளது. அதற்குள் நேற்றுமுன்தினம் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.
இதை அறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ், வால்பாறை வனச்சரக மனித -வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் வேட்டை தடுப்பு காவலர்கள், தீயணைப்பு துறை, வில்லோணி எஸ்டேட் தொழிலாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இதையடுத்து அந்த தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டு சுவரை இடித்து காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அந்த சுவர் மிகவும் உறுதியாக இருந்ததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து இரவு 8 மணியளவில் தண்ணீர் தொட்டி உடைக் கப்பட்டு காட்டெருமை மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது. காட்டெருமையை உயிருடன் மீட்கப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.