போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் புகுந்த காட்டெருமை

கொடைக்கானலில் போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது.

Update: 2022-10-17 18:45 GMT

கொடைக்கானல் நகர் பகுதிகளில் அடிக்கடி காட்டெருமைகள் கூட்டமாக வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது. பின்னர் அது அங்கேயே சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட பணிமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு காட்டெருமை தானாக அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சென்றது. இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். எனவே நகர் பகுதிக்குள் வலம் வரும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்