உணவு தேடி வீட்டுக்கு வரும் காட்டெருமை
உணவு தேடி வீட்டுக்கு வரும் காட்டெருமை
குன்னூர்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிவதோடு குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியில் உணவு தேடி வரும் காட்டெருமை ஒன்று, வீட்டுக்கே வந்து கதவை தட்டுகிறது. தனக்கு தேவையான உணவு கிடைத்தால், தின்றுவிட்டு அமைதியாக சென்றுவிடுகிறது. இதனை தொந்தரவு செய்யாமலும், கூச்சலிட்டு விரட்டாமலும் அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இது சாதாரணமாக தெரிந்தாலும், சில நேரங்களில் காட்டெருமையின் தாக்குதலுக்கு ஆளாகலாம். எனவே அந்த காட்டெருமையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.