மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரியாணி கடை உரிமையாளர் பலி

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரியாணி கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-27 18:45 GMT

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரியாணி கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

பரியாணி கடை உரிமையாளர் பலி

திருவண்ணாமலை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் யாசிம் (வயது 40). இவர், கீழ்அணைக்கரை பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியாணி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அவரது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கீழ்அணைக்கரையில் இருந்து நல்லவன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புதிய பைபாஸ் சாலை அருகில் பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த முரம்பு மண் குவியல் மீது யாசிம் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் காயம்

மேலும் மோட்டார் சைக்கிளில் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாசிமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்